Friday, May 30, 2008

தினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கட்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம். தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது.மூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந் தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானதுவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பு: கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ள வர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
நன்றி வாஞ்ஜுர்
தொகுப்பு ஹாஜா

Friday, May 16, 2008

CONDOLENCE

Assalamu Alaikum,

Inna Lillahi Va Inna Ilahi Rajihoon.

The Sad Demise of His Highness the Father Amir of Kuwait Sheikh Saad Al-Abdullah Al-Salem Al-Sabah is not only a great loss to Kuwait and it's citizen but to the entire Muslim world. H.H was a great statesman and guided Kuwait to it's prosperity we see today. H.H was a benevolent to every one especially to Indian Community. TMCA deeply express its condolence to the Al Sabah Family and to the people of Kuwait. Let us all join together to pray to Almighty Allah to bless the departed soul with His Jenna (paradise)

May his soul rest in Peace.

TMCA - Kuwait
http://www.tmcaonline.com